tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக! ஜாக்டோ- ஜியோ வலியுறுத்தல் 

 நாகப்பட்டினம், செப்.2- ஜாக்டோ- ஜியோ நாகை மாவட்டக் கூட்டம் வெள்ளிக்கிழமை நாகப்பட்டி னத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.டி.அன்பழகன் மாநில ஜாக்டோ- ஜியோ முடிவுகளை விளக்கிக் கூறினார். ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் ப.அந்துவன் சேரல் சிறப்பு ரையாற்றினர். உயர்- மேல்நிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் ஜி.கே.நாதன், தமிழக ஆசி ரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி மாநிலச் செயலாளர் சித்ரா காந்தி, கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத் தலைவர் சிவ.பழனி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் து.இளவரசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர். ஜாக்டோ- ஜியோ மாநில முடி வின்படி, மாணவர், ஆசிரியர் நலன் மற்றும் சமூக நீதிக்கு எதிரான தேசி யக் கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட் டவை வலியுறுத்தி நாகை மாவட்டத் தில் 11 ஒன்றியத் தலைநகர்களில் 6-ல் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்துவது, 13-ல் நாகப்பட்டினம் மற்றும் மயி லாடுதுறைக் கல்வி மாவட்ட அள வில் பேரணி நடத்துதல், 24-ல் நாகப் பட்டினத்தில் பட்டினிப் போராட்டம் நடத்துதல் ஆகிய இயக்கங்களை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட நிதிக் காப்பாளர் எம்.காந்தி நன்றி கூறினார்.