நாகப்பட்டினம், ஏப்.15-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் கடைத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேர் தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம்.கே.நாகராஜன் தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள்உறுப்பினருமான வி.மாரிமுத்து, எம்.செல்வராஜுக்கு வாக்குகள் கேட்டுச் சிறப்புரையாற்றினார். சி.பி.எம்.கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன், திராவிட முன் னேற்றக் கழகத்தின் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.கே.கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக மக்களிசைப் பாடகர் வெண்மணி எஸ்.மோகன் இங்கர்சால், இயக்கப் பாடல் களைப் பாடினார். நிறைவில், சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர் என்.எம். அபுபக்கர் நன்றி கூறினார்.இதே போல் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகைக் கடைத்தெருவில் ஞாயிற்றுக் கிழமை தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின்கீழையூர் ஒன்றியச் செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். சி.பி.எம்.கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், மாவட்டச் செயற்குழுஉறுப்பினர் ஆர்.முத்துப்பெருமாள், சி.பி.ஐ. ஒன்றியச் செயலாளர் டி.செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன்(சி.பி.எம்), சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.முருகையன் உள்ளிட்டோர் உரையாற்றினர். கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, சி.பி.ஐ.வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.