tamilnadu

img

பரசலூர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் 

 தரங்கம்பாடி: நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சமூக ஆர்வலரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான எம்.மாயா வெங்கடேசன் புதனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேச்சையாக போட்டியிடும் இவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து மனுவினை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளித்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான நலத்திட்ட உதவிகளை சொந்த செலவில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் ரவிச்சந்திரன், பரசலூர் கண்ணன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் உடனிருந்தனர்.