tamilnadu

img

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி

சீர்காழி, பிப்.11-  நாகை மாவட்டம் கொள்ளி டம் வியாபாரிகள் சார்பில் மயி லாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கொள்ளி டம் அஞ்சல் அலுவலகத்தில் வியா பாரிகள் சார்பில் தமிழக முதல்வ ரின் தலைமைச் செயலகம் அலு வலகத்துக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற் றது. கொள்ளிடம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிக ழ்ச்சியில் மயிலாடுதுறை முன் னாள் திமுக எம்.எல்.ஏ ஜெகவீர பாண்டியன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். செயலாளர் ரமேஷ், பொருளாளர் சேகர், துணைத் தலைவர் புருஷோத்தமன், ராஜா முகம்மது, மணிவண்ணன், அப்பர் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ.ஜெகவீரபாண்டியன் கூறுகையில், தரங்கம்பாடி, சீர்காழி, கொள்ளிடம் மற்றும் மயி லாடுதுறை ஆகிய பகுதிகளிலி ருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மயிலாடுதுறையை தனி மாவட்ட மாக அறிவிக்க கோரி முதல்வ ரின் தலைமைச் செயலக அலு வலகத்துக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் பணி நடை பெற்றது.  கொள்ளிடத்திலிருந்து அனை த்து தரப்பு மக்களிடமிருந்தும் ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பியுள்ளோம். மயிலாடு துறையிலிருந்து ஒரு லட்சம் அஞ் சல் அட்டை அனுப்பப்படுகிறது. எனவே மக்கள் நலன் கருதி வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே மயிலாடுதுறையை தனி மாவட்ட மாக அறிவிக்க வேண்டும் என் றார்.