tamilnadu

சென்னையில் இருந்து வருபவர்களுக்கு சோதனை  முத்திரை

  சீர்காழி, மே 9- தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் அதிகம் பாதித்துள்ளதால் அப்பகுதி மக்களில் சிலர் அங்கு இருந்து வெளியேறி வருகின்றனர். இதில் பலர், கொள்ளிடம் வழியே தினந்தோறும் சென்று கொண்டிருக்கின்றனர்.  சென்னையிலிருந்து மயி லாடுதுறை, திருக்கடையூர், காரைக்கால், மணிக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 கார்களில் சென்ற 15 பேரை கொள்ளிடம் சோதனைச் ச்சாவடியில் காவல்துறை யினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தடுத்து நிறுத்தி அங்கேயே மருத்துவ பரி சோதனை செய்து அனை வரின் கைகளிலும் கொரோ னா சோதனை செய்ததற் கான முத்திரை இட்டு அவர்கள் செல்லும் ஊரில் உள்ள அவரவர் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அதனை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண் காணிக்கவும் அறிவுறுத்தப் பட்டது. தொடர்ந்து மருத்து வக் குழுவினர் பரிசோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர்.