tamilnadu

நேர்மையாக பணியாற்றிய ஆய்வாளர் திடீர் பணியிட மாற்றம்: ஊழியர்கள் அதிர்ச்சி

சீர்காழி, ஜூலை 13- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் சாலை ஆய்வாள ராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இங்கு  பணியாற்றி வருகிறார். கொள்ளிடம் ஊராட்சி  ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி சாலைகளின் பணியின் போது, ஒரு தலைபட்ச மாக நடக்காமல், நேர்மையாக பணியாற்றி, பணி தரமாக இருந்தால் மட்டுமே, பணிக்கு ரிய கோப்பில் கையெழுத்திடுவார். பணி தர மற்றதாக இருந்தால் கையெழுத்திட மறுத்து  வந்தார்.  இந்நிலையில் கடந்த மாதத்தில் ஒன்றி யக் குழு தலைவரின் அலுவலகத்தில், பெயிண்ட் அடித்தல், மேஜை, நாற்காலி வாங்குதல், அறைகளை சரிசெய்தல், குளிர்சா தன வசதி அமைத்தல் உள்ளிட்ட பணிகள்  மேற்கொள்ளப்பட்டதில் இவர் மேற்பார்வை யாளராக இருந்து பணியில் ஈடுபட்டார். இதில் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு அதிக தொகை செலவு செயயப்பட்டதாக ஊரா ட்சி ஒன்றியம் சார்பில் கணக்கு காட்டப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் ஒன்றிய அலு வலகத்தை ஆய்வு செய்தபோது, அதிகாரி களிடம் குறைந்த தொகை செலவு செய்யப்ப ட்டதை, பன்மடங்கு அதிகமாக செலவு செய்த தாக கணக்கு காட்டப்பட்டுள்ள உண்மையை  அதிகாரிகளிடம் ஜெயக்குமார் எழுத்துப்பூர்வ மாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. உண்மை யைத் தெரிவித்த காரணத்தாலும், அரசு பணம் வீணாக செலவு செய்யப்பட்டதை அம்பலப்ப டுத்தியதாலும் நேர்மையான அதிகாரியான ஜெயக்குமார் கீழ்வேளுர் ஒன்றிய அலுவ லகத்துக்கு பணியிட மாறுதல் செய்ய ப்பட்டார். இதற்கு ஒன்றியக் குழு தலைவர் ஜெய பிரகாஷ்(திமுக) கண்டனம் தெரிவித்து பணி யிட மாறுதலுக்கு ஒப்புதல் கையொப்பமிட மறுத்துவிட்டார். நேர்மையாக பணிபுரிந்து வந்த கொள்ளிடம் சாலை ஆய்வாளரின் திடீர்  பணியிட மாற்றத்தால் ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.