tamilnadu

img

அரசு ஊழியர் சங்க  மாநாட்டு பிரச்சாரம்

 நாகப்பட்டினம், செப்.3- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13-வது மாநில மாநாடு செப்டம்பர்- 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் தஞ்சாவூரிலும், நாகை மாவட்ட மாநாடு, செப்டம்பர் 14 மற்றும் 15ஆம் தேதி களில் இரு நாட்கள் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கிலும் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, நாகை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிரச்சார இயக்கம் துவங்கியது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.அந்து வன் சேரல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சு.சிவகுமார், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் பா.ராணி நன்றி கூறினார்.