tamilnadu

img

கிராமப்புற மாணவர்களின் இலவச பயிற்சி மையமாக மாற்றப்பட்ட சிபிஎம் அலுவலகம்

தரங்கம்பாடி,மார்ச் 19-  நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அருகேயுள்ள சோழன்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை வட்டச் செயலாளராக செயல்பட்ட முதுபெரும் தோழர் வீ.கே.முத்துசாமி அவர்களின் நினைவாக புதிய அலுவலகம் கட்டப்பட்டு புத னன்று திறந்துவைக்கப்பட்டது. கட்சியின் அலுவலகமாக மட்டும் இல்லாமல், சோழன்பேட்டை,மாப் படுகை, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக இலவச பயிற்சி மைய மாகவும் நடத்தலாம் என திட்டமிட்டு,  8 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் குரூப் தேர்வுகள் , பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகளையும் அலு வலகத்தில் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் இம்மையத்தில் பல்வேறு துறை சார்ந்த நூல்கள் ,வரலாற்று நூல்கள், தினசரி நாளிதழ்களையும் மாணவர்கள் படிப்பதற்காக  வைத்துள் ளனர். ஏழை,எளிய மாணவர்களின் கல்வி மேம்பட அமைக்கப்பட்ட வீ.கே. எம் படிப்பகத்தை கட்சியின் மாவட்ட செயலாளரும்,சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் கிளைச் செயலாளர்கள் சி.ராஜா,எம்.வள்ளி ஆகியோர் தலைமை வகித்தனர்.   கட்சியின் கொடியினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன் ஏற்றிவைத்தார். பி.வளர்மதி வரவேற்று பேசினார். மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்ட தலைவர் வ.பழனிவேலு, மாவட்ட செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், தமுஎகச மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் ஆகி யோர் துவக்கி வைத்தனர்.வட்டச் செயலாளர் சி.மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், ஏ.வி.சிங்காரவேலன்,பி.மாரியப்பன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கோவிந்தசாமி, எம்.மணி,ஆர்.ரவீந்திரன், டி.துரைக்கண்ணு மற்றும் சோழம்பேட்டை பகுதியின் கிளை உறுப் பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக ஊராட்சி மன்ற உறுப்பினர் பவானி ராமதாஸ் நன்றி கூறினார்.