நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நாகூர் வணிகர் சங்கக் கட்டிடத்தில் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுதல், பதிவு செய்தல் மற்றும் விழிப்பு ணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் உணவகம், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வணிகர்களுக்கான சான்றுகள் வேண்டி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, நாகூர் வணிகர் சங்கத் தலைவர் கே.சரவணப்பெருமாள் சான்றுகளை வழங்கினார். சங்கச் செயலாளர் ஏ.எல்.ஹிமாயத் அலி, பொருளாளர் என்.கரிகாலன், துணைத் தலைவர் எம்.முகமது யூசுப், துணைச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் பி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நகராட்சி உணவுப் பாது காப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் நன்றி கூறினார்.