நாகப்பட்டினம், ஆக.21- தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அலுவலர் சங்க மண்ட லச் சிறப்புக் கூட்டம், நாகப்பட்டினம், அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.முரு கேசன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.டி. அன்பழகன், மாநிலப் பொருளாளர் எம்.சிம்சன், மாநில அமைப்புச் செயலாளர் வி.ஜெயவேல், தலைமை நிலையச் செயலாளர் ஆர்.வேலவன் ஆகியோர் உரையாற்றினர். உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன் படி, தகுதியுள்ள உணவுப் பாதுகாப்பு அலு வலர்கள் மட்டுமே மாவட்ட நியமன அலுவலர்களாகப் பணி யேற்க வேண்டும் என்று உள்ளது. தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை துவங்கப்பட்டபோது, தற்காலிக ஏற்பாடாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சி கள் இவற்றில் பணிபுரிந்த மருத்துவர்கள் மாவட்ட நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இப்படி மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்ட காலம் 5.8.2018 உடன் முடிந்துவிட்டது. மருத்துவர்கள் மருத்துவப் பணி மட்டுமே செய்ய வேண் டும். மாவட்ட நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மருத்து வர்களை மருத்துவப் பணிக்கு அனுப்பி விட்டு, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலராக உணவுப் பாதுகாப்பு அலு வலர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு அளிக் கப்பட வேண்டும். இதனைச் செயற்படுத்தாவிடில், 2019, அக்டோபர் 9 அன்று, உணவுப் பாதுகாப்புத் துறை ஆணை யரகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டலக் கூட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.