தரங்கம்பாடி, ஜூலை 23- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தி னர், நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாயன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில தலைவர் எம்.சுப்ரமணியன் பணி ஓய்வு பெறும் நாளன்று பழிவாங்கும் நோக்கத்தோடு தற்கா லிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து நடைபெற்ற போரா ட்டத்தில் ஊராட்சி செயலர்கள், அனைத்து நிலை அலுவ லர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். வட்டார தலைவர் கோவி.வெங்கடேசன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். உடனடியாக பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திலும் ஒட்டுமொத்த அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதே போல் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான தியாகராஜன் தலைமை வகித்தார். 200-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், அனைத்து நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அருண், சங்க மாவட்ட தணிக்கையாளர் மாரி.தெட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேந்திரன், வட்டார தலைவர் மனோ கரன், செயலாளர் ஜீவா கண்டன உரையாற்றினர். மேலும் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்திலும் ஒட்டுமொத்த அலுவ லர்களும் கலந்து கொண்டனர்.