districts

பாசன வாய்க்கால் தூர்வார கால வரம்பை நீக்க வேண்டும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வலியுறுத்தல்

தஞ்சாவூர், செப்.22- ‘பாசன வாய்க்கால்களை தூர்வார 3  ஆண்டுகள் என்ற கால வரம்பை நீக்க வேண்டும்’ என ஊரக வளர்ச்சித் துறை அலு வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.  தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் தரேஷ் அகமது, மேற் கொள்ளப்பட்டு வரும், வளர்ச்சிப் பணிகள்  தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண் டார்.  அவரிடம்  தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின், தஞ்சை மாவட்ட செயலாளர் கை. கோவிந்த ராசன், மாவட்ட துணைத் தலைவர் சாமிநாதன்  மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் திட்டத்தின் கீழ், பாசன வாய்க்கால் கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை ஒரு முறை தூர்வாரினால், அடுத்த 3 ஆண்டு களுக்கு, அந்த வாய்க்கால்களை தூர்வாரு வதற்கு அனுமதி பெற இயலாது என்ற நிலை  உள்ளது.  தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க் கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாருவதற்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை  என்ற காலவரம்பை நீக்கம் செய்து, ஒவ்வொரு  ஆண்டும் அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.  பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ்  அனுமதி அளிக்கப்பட்ட வீடுகளில், பயனாளி களின் குடும்ப சூழ்நிலை, வயது முதிர்வு மற்றும் வாரிசு இல்லாத பயனாளி, வாரிசு களின் விருப்பமின்மை போன்ற காரணங்க ளால், வீடு கட்ட விருப்பம் இல்லாத பயனாளி களுக்கும், நீண்ட காலமாக ஆரம்பிக்கப் படாத வீடுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, பயனாளிகளுக்கு விடுவிக்கப் பட்ட நிதியை மீளப் பெற வேண்டும்”  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.