tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம்

நாகப்பட்டினம், டிச.28- நாகை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்டத் தேர்தல் 27-ம் தேதி முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல், வேதாரணியம் ஒன்றியப் பகுதிகளில் திங்கட்கிழமை அன்று நடை பெறவிருக்கிறது. இதற்கான பிரச்சாரம், சனிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. வேதாரணியம் ஒன்றியம், பஞ்சநதிக் குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி க்கு ஏ.வெற்றியழகன், ஊராட்சி ஒன்றிய வார்டு-23 க்கு எம்.செந்தில்குமார் ஆகியோர் சி.பி.எம். வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு வாக்குக் கேட்டுப் பஞ்சநதிக்குளத்தில் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணி நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், விவ சாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளருமாகிய பெ.சண்முகம், சி.பி.எம். நாகை மாவட்டச் செயலாள ரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான நாகைமாலி ஆகியோர் சி.பி.எம். வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டுப்  பிரச்சாரம் செய்து, பேரணியைத் துவக்கி வைத்தனர். சி.பி.எம். வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி, வி.ச. ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.