tamilnadu

img

குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு மாநாடு

நாகப்பட்டினம், மார்ச் 9- மகளிர் தினத்தையொட்டி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மகளிர் இயக்கம் (விமன் இந்தியா மூவ்மெண்ட்) சார்பில், நாகப்பட்டினத்தில் பேரணி, மாநாடு நடைபெற்றது. நாகை நீலா கீழவீதியில், மகளிர் பேரணி யை, அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நஜிமாபேகம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பேரணி, அவுரித் திடலில் நிறைவு பெற்றதும், அங்கு வீர வேலுநாச்சியார் அரங்கில், அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.பஷீராகனி தலைமையில் மாநாடு நடை பெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.சபியுல்லா, நாகைத் தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.பைசல்ரகுமான், மாவட்டப் பொதுச் செய லாளர் எஸ்.நூருல்அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அமைப்பின் மாவட்டப் பொதுச் செயலாளர் எஸ்.சுலைகா வரவேற்றார். விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலத் தலைவர் எஸ்.நஜிமாபேகம், எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலாளர் எஸ்.அகமதுநவவி, பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.அலி பாட்சா, மகளிர் அமைப்பின் சார்பில் எம்.ஆசி யாமரியம், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நஜிமாபானு ஆகியோர் உரையாற்றி னர்.  இழப்பதற்கு ஏதும் இல்லை, அடை வதற்குப் பொன்னுலகம் உண்டு, விடியல் காணும் வரை முடியாது இந்தப் போராட்டம் போன்ற வாசகங்கள் மாநாட்டில் தெறித்தன. விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத் துணைத் தலைவர் செய்யது சுத்தான் பீவி  நன்றி கூறினார். ஏ.தாஹிராபானு நிகழ்ச்சிக ளைத் தொகுத்து வழங்கினார்.