tamilnadu

img

சூறைக்காற்றில் 1500 வாழைகள் நாசம்

நாகர்கோவில்: அஞ்சுகிராமம் அருகே பொட்டல் குளம் பகுதியில் ஞாயிறன்று சூறைக் காற்று வீசியது. இதில் அப்பகுதியில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட வாழைகள் சூறைக் காற்றில் முறிந்து நாசமாயின. அஞ்சுகிராமம்அருகே பொட்டல் குளம் பகுதியை சேர்ந்தவர் சார்ந்தவர் வில்சன் (45). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் சுமார் 3000 வாழை மரம்நட்டு பராமரித்து வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று வீசிய சூறைக்காற் றில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமாயின. இதனால் சுமார் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அவர் கூறினார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும்வேளாண் துறையை சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்தை வந்து பார்வை யிட்டு சேதம் குறித்து விசாரணை நடத்தினர்.