மும்பை:
இஸ்ரோ, நிலவுக்கு அனுப்பிய ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு கிடைக்காதது, விஞ்ஞானிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனினும், விக்ரம் லேண்டரை மீண்டும் இயக்குவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போது மகராஷ்டிராவில் ‘சிவ பிரதிஸ்தான் ஹிந்துஸ்தான்’ என்ற அமைப்பைநடத்தி வருபவருமான சாம்பாஜி பிதே,விக்ரம் லேண்டர் பிரச்சனைக்கு உள்ளானதற்கான ‘காரணத்தை’ கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்.“அமெரிக்காவானது, நிலவுக்கு விண் கலனை அனுப்ப 38 முறை முயன்று தோற்றது. இதையடுத்து அமெரிக்காவின் விஞ்ஞானிகளில் ஒருவர் இந்திய நேரமுறையை பின்பற்றி நிலவுக்கு விண்கலம் அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார். இதனடிப்படையில் ஏகாதசி நாளன்று அமெரிக்காவின் விண்கலம் 39-ஆவது முறையாகநிலவுக்கு அனுப்பப்பட்டது. அந்த முயற்சிவெற்றியும் பெற்றது.” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஏகாதசி நாளில் விண்கலத்தைஏவாததே பிரச்சனைக்கு காரணம் என்பதுபோலவும், அன்றைய தினம் அனுப்பியிருந்தால் விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்கி இருக்கும் என்பது போலவும் கூறி,இதில், அமெரிக்க கதை ஒன்றையும் பின்னிணைப்பாக சேர்த்துள்ளார்.
“தனது தோட்டத்தில் விளையும் மாம் பழங்களை சாப்பிடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும்” என்று உளறியவரும் இதே சாம்பாஜிதான். அவ்வப்போது, ஒன்றும் தெரியாத அப்பாவி போல பேசினாலும், 2018-இல் பீமாகோரேகானில் தலித் மக்கள் மீது நடத்தப் பட்ட வன்முறையின் சூத்திரதாரி சாம்பாஜி என்பது குறிப்பிடத்தக்கது.