tamilnadu

img

‘தற்சார்பு’ பற்றி உலகிற்கே ரஷ்யா பாடம் நடத்தி விட்டது... மோடி உபதேசம் மட்டுமே செய்கிறார்...

மும்பை:
‘தற்சார்பு இந்தியா’ என்று மோடி உபதேசம் மட்டுமே செய்து கொண்டிருக்கும்போது, கொரோனாதடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, தற்சார்பு என்றால்என்னவென்று, உலகிற்கே‘ரஷ்யா’ பாடம் எடுத்துவிட்டது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.சிவசேனா-வின் நாளேடான ‘சாம்னா’வில் கட் டுரை ஒன்றை சஞ்சய் ராவத்எழுதியுள்ளார்.

அதில், “உலகிலேயே முதல் கொரோனா தடுப்புமருந்தை ரஷ்யா கண்டுபிடித்ததாக அந்நாட்டு ஜனா திபதி விளாடிமிர் புதின் கடந்தவாரம் அறிவித்தார். இந்ததடுப்பு மருந்து உடலில்நிலையான நோய் எதிர்ப்புச் சக்தியை தருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தனது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற் படுத்தும் வகையிலும், உலகிற்கு தங்களின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என அறிவிக்கும் வகையிலும் புதின் தனது மகளின்உடலிலேயே கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத் தினார். இதன்மூலம் தற் சார்பு பற்றி உலகிற்கே முதன்முதலாக ரஷ்யாதான் பாடம் எடுத்துள்ளது” என்று பாராட்டியுள்ளார்.அதேநேரம், “இந்தியாவில் தற்சார்பு பற்றி உபதேசம் மட்டுமே நடக்கிறது”என்றும் அவர் சாடியுள்ளார்.‘சூப்பர் பவர்’ என்பதற்குரஷ்ய நாடுதான் உதாரணம். ஆனால் நம்முடையஅரசியல் தலைவர்கள் (மத்திய ஆட்சியாளர்கள்) யாரும் ரஷ்யாவைப் பின்பற்ற மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் அமெரிக்கா மீது அன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்” எனவும்சஞ்சய் ராவத் சாடியுள்ளார்.