மும்பை:
பாஜக சதிவேலைகளை ஆரம் பித்து விட்டதாகவும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும்மகாராஷ்டிர மாநில அமைச்சர்களை முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற் றுக்கொண்ட அமைச்சர்கள், முதல் வர் உத்தவ் தாக்கரேவை, புதனன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப் போது, அவர்கள் மத்தியில் உத்தவ் தாக்கரே பேசியிருப்பதாவது:
“பாஜகவிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்களையும் இந்த ஆட்சியையும் இழிவுபடுத்த பாஜகவினர் முயற்சி செய்வார்கள். அவர்களின் வலைக்குள் விழுந்துவிடக் கூடாது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பாஜக தன்னுடைய தந்திரங்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளது.கடுமையாக நாம் உழைக்க வேண்டும். பாஜகவின் செயல்களால் நமது கவனத்தைத் திசை திருப்பிவிடக் கூடாது.இந்த அரசாங்கத்தின் வலிமையை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். முழுமையான தூரத்தை இந்தஅரசு சென்றடையும் என்று உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.பாஜக தனது முழுமையான பலத்துடன் பிரச்சனைகளை உருவாக்க முயற்சி செய்யும். அவற்றைச் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.அமைச்சர்கள், பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். அரசாங்கத்துக்குஎதிராக எழும் பிரச்சனைகளுக்கு தேவையில்லாமல் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது.”இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.