tamilnadu

img

மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து ரசாயன கழிவு வெளியேற்றம்

மேட்டூர், ஜூலை17- மேட்டூர்  கெம்பிளாஸ்ட் ஆலை யில்  ரசாயன கழிவுகள் குடியிருப்பு பகுதியில் வெளியேறியதை கண் டித்து அப்பகுதி பொதுமக்கள்  ஆலையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் குஞ்சாண்டியூர் பகுதியில் கெம் பிளாஸ்ட் நிறுவனத்திற்கு  சொந்த மான ஆலை செயல்பட்டு வருகி றது. இந்த ஆலையில் வீரியமிக்க ரசாயனங்கள், அமிலங்கள் தயா ரிக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் இந்த ஆலையில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுகள், ஆலையை சுற்றி அமைந்துள்ள  கண்ணாடி மாரி யம்மன் கோவில் பகுதி, ஸ்ரீ நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால், இப் பகுதியில் உள்ள பொதுமக்க ளுக்கு மூச்சுத்திணறல்  ஏற்பட்ட நிலையில், ஆவேசமடைந்த இப் பகுதி பொதுமக்கள் புதனன்று ஆலையை முற்றுகையிட்டது டன், சாலை மறியல் போராட்டத் திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர், வட் டாட்சியர் மற்றும் கருமலைக் கூடல் காவல்துறையினர் சம் பவ இடத்திற்கு விரைந்து வந்து  போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரி களுடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின் ரசாயன வெளி யேற்றம் தொடர்பாக ஆலை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த ஆலை நிர் வாகத்தால் கடந்த ஆண்டு ஹைட் ரஜன் பெராக்சைடு  அமிலம் தயா ரிக்கும் புதிய பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால்,  இப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பே ஆலையில் இந்த அமிலங்களை தயாரிக்க வேண்டும். பாதுகாப்பில்லாத ரசாயன தயாரிப்பை  இந்த குடி யிருப்பு பகுதி அருகே தயாரிக் கக் கூடாது என சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நோட்டீஸ் விநி யோகம் செய்யப்பட்டது. மேலும், கெம்பிளாஸ்ட் நிர்வாகம்  ரசாய னங்களை குடியிருப்பு பகுதியில் வெளியேற்றுவதால் தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற் படுகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் வலியுறுத்தி இருந் தது குறிப்பிடத்தக்கதாகும்.