tamilnadu

சட்டப்பேரவையில் வெளிநடப்பு- வெளியேற்றம் - எச்சரிக்கை....

சென்னை:
சட்டப்பேரவையில் ஒரு பிரச்சனை குறித்து பேரவைத் தலைவரின் அனுமதியின்றி எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பேசியதால், அவை அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. 

மேலும், அரசுக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பதாகைகளை காட்டியதால் முதல் முறையாக எச்சரிக்கை செய்தார். தொடர்ந்து அவையை நடத்தவிடாமல் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியபோதும், முதலமைச்சர் விளக்கம் அளிக்க முற்பட்டார். அதற்குள் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளியேறினர். அப்போது பேரவை வளாகத்திற்கு வெளியில் தொடர்ந்து கோஷங்கள் போட்டதால் அனைவரையும் வெளியேற்றும்படி சபைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.அத்துடன், இது முதல் முறை என்பதால் அதிமுக உறுப்பினர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவர் மு. அப்பாவு எச்சரிக்கை விடுத்தார்.

அதிமுகவுக்கு ஆதரவாக பாமக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சிலரது பெயரும் சேர்க்க முயற்சிகள் நடக்கிறது” என்றார்.முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,“இன்றும்(ஆக.18) நாளை(ஆக.19) இரண்டு நாட்களும் சட்டப்பேரவை கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கி
றது” என்றார்.