போல்ட் வால்ட் (கம்பு மூலம் உயரம் தாண்டுதல்) பிரிவில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் சாம் கென்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் கடந்த ஒலிம்பிக்கில் (ரியோ) வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.