tamilnadu

img

ஆந்திராவில் குழந்தைகளை தாக்கும் கொரோனா....

அமராவதி
ஆந்திர மாநிலத்தில் மூன்று வயது  குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை அனைவரையும் கொரோனா பாதித்துள்ளது. இது குறித்து அவுட்லுக் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-
ஆந்திரா மாநிலம் குண்டூரில் சேர்ந்த 80 வயது பெண்,  இரண்டு மூன்று வயது குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வயது குழந்தையில் ஒன்று கர்னூல் பகுதியையும்  மற்றொரு குழந்தை கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தது ஆகும்.இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி  காலை 8 மணி வரை மொத்தம் 483 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

மார்ச் 12-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம்தேதி வரை மாநிலத்தில்  483 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 125 பெண்கள் மற்றவர்கள் ஆண்கள். 31 வயதிற்குட்பட்டவர்கள் 15 பேர்.மூன்று, ஐந்து மற்றும் ஏழு வயதுள்ள குழந்தைகள் தலா இரண்டும், எட்டு மற்றும் ஆறு வயதில் தலா மூன்று பேரும், 9, 10 வயதில் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 10,505 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 10,322 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.கடந்த திங்களன்று ஏழு வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரத்தில் 2,010 இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஏழு ஆய்வகங்களும் நாளொன்றுக்கு 990 மாதிரிகள் சோதிக்கும் திறன் கொண்டவை.