அமராவதி
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த ஒருவார காலமாக கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக நேற்று (வியாழன்) தினசரி பாதிப்பில் தமிழகத்தை பினுக்குத்தள்ளி 2-வது இடத்தை பிடித்தது. நேற்று ஆந்திராவில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு குறுகிய காலத்தில் 1 லட்சத்தை (1.20 லட்சம்) கடந்தது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.