states

img

சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமீன்!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார காலம் நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 2014 முதல் 2019 வரை ஆட்சியிலிருந்தபோது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுக்காக ‘சீமென்ஸ்’ நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு ரூ.371 கோடி ஒதுக்கீடு செய்தார். இதில் ரூ. 118 கோடி  ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி அரசு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.  
இதனிடையே, சந்திரபாபு நாயுடு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, பைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரிய வழக்கில் இன்று ஆந்திர உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார காலம் நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.