மும்பை:
மும்பை நகரின் வசாய் பகுதியில் சிகரெட் வாங்குவதற்காக சுற்றித் திரிந்த இருவரை தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில், அந்த இருவரும், துணை நடிகர்கள் என்றும், வசாய் பகுதியின் அருகே பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ரோப் நடிக்கும் புதிய திரைப்படத்திற்காக தீவிரவாதிகள் வேடமிட்டிருந்தவர்கள் என்பதும் தெரிய வந்ததுள்ளது. எனினும், பொதுவெளியில் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் சுற்றித்திரிந்ததாக அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.