மும்பை:
மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையில்பாஜக இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக் கள் எழுந்துள்ளன. பணம், பதவி ஆசையைக் காட்டி பாஜக, இந்த வேலையைச் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, என்சிபி கட்சித் தலைமையானது, தனது எம்எல்ஏ-க்கள் அனைவரையும் பாதுகாப்பதற்காக, அவர்களை மும்பைரினைசன்ஸ் சொகுசு ஹோட்டலில் தங்க வைத்தது. ஆனால், ஹோட்டலுக்குள்ளும் ஊடுருவி பாஜக தரப்பு பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாகின. சீருடை அணியாத, சில போலீஸ் அதிகாரிகள், என்சிபி எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வேவு பார்ப்பதாகவும் அந்த தகவல்கள் கூறின.
இந்நிலையில், எம்எல்ஏ-க்களை வேவுபார்த்த, போலீஸ் அதிகாரி ஒருவர், என்சிபிதலைவர்களிடம் மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட என்சிபி தலைவர்கள், அந்த போலீஸ் அதிகாரியை ஹோட்டலில் இருந்து வெளியேற்றினர்.மேலும், தங்களது எம்எல்ஏ-க்களை யும் இரவோடு இரவாக வேறு ஒரு ஹோட்டலுக்கு இடமாற்றியுள்ளனர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை, என்சிபி எம்எல்ஏ-க்கள் ஹோட்டலிலேயே தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.