tamilnadu

img

அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம்...

மும்பை:
மகாராஷ்டிராவில் வாழ்பவர்கள், கல்விகற்பவர்கள் மராத்தி மொழியைக் கற்க வேண்டியது அவசியம் என்று மகாராஷ்டிர மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ, மற்றும் பன்னாட்டு பாடத்திட்டத்தைக் கொண்டுள்ள ஐபி பள்ளிகள் இது தொடர்பாக மாநில அரசின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி பாடத்திட்டத்தில் மராத்தி மொழியைக் கட்டாயப் பாட மாக்கவில்லை என்றால், கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டியது வரும் என்று பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிவசேனா எம்எல்ஏ நீலம் கோர்ஹே, பன்னாட்டு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் மராத்திமொழியைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியதையடுத்து பட்னாவிஸ் இந்த கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

“எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படை யில் மராத்தி மொழியை கற்பிப்பதில் பள்ளிகள் சுணக்கம் காட்டி வரு கின்றன. சில பள்ளிகள் மராத்தி மொழியைப் புறக்கணிப்பதாகவும் எங்க ளுக்குத் தகவல்கள் வருகின்றன; எனவே, இதற்கான சட்டங்கள் இன்னும் வலுவாக்கப்படும்” என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.அண்மையில், இந்தி யைக் கட்டாயப்பாடம் ஆக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக, தென்மாநிலங்கள் மட்டுமன்றி, பாஜக ஆளும் மகாராஷ்டிரமாநிலத்திலும் போராட்டங் கள் நடைப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியிலேயே பட்னாவிஸ், மராத்தி மொழி மீது அக்கறைகாட்டியுள்ளார்.