மும்பை:
தான் பிராமணன்தான்; ஆனால், நிறைய சாதித்துள்ளேன் என்று பாஜகதலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.பாஜகவில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தலைவர் களை, தேவேந்திர பட்னாவிஸ் புறக்கணிக்கிறார். கடந்த தேர்தலில் பிற் படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தலைவர்கள் தனக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர் களை தோற்கடிக்க மறைமுகமாக வேலைபார்த்தார் என்று பாஜக-வுக்கு உள்ளேயே
எதிர்ப்பு எழுந்துள்ளது. பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சே, முன்னாள்எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஷெண்ட்கே,ராஜூ தோட்சம் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே, பாஜகவின் பிராமணர் ஆதரவு நிலைபாட்டை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவின் உள்ளூர் தலைவர் களுக்கு பதில் கூறுவதை விட்டுவிட்டு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது பாய்ந்துள்ளார்.“நான் ஒரு பிராமணன் என்பது உலகிற்கே தெரியும்; என்னை மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர்; நான் மாநிலஅரசியலில் சிலவற்றை சாதித்து இருப்பதாக உணர்கிறேன்; எனது தனித்துவமான வெற்றி எதுவென்றால் சரத்பவார் போன்ற பெரிய தலைவர்களே என்னை அடிக்கடி மறைமுகமாகசாதி ரீதியாக விமர்சிப்பதுதான்” என்றுகூறியுள்ளார்.மேலும், “பாஜகவே பிற்படுத்தப் பட்டவர்களுக்கான கட்சிதான்; பிரதமர் மோடியே பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்தான்” என்று குறிப் பிட்டுள்ள பட்னாவிஸ், “பாஜகவின் 105 எம்எல்ஏ-க்களில் 35 பேர் மராத்தாசமூகத்தை சேர்ந்தவர்கள். 37 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். 18 பேர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள்” என்றும் பட்டியல் போட்டுள்ளார்.