tamilnadu

img

ராணுவத்திற்கான ஆயுத கொள்முதலை அரசியலாக்கினால் நாட்டிற்கே பாதிப்பு விமானப்படை முன்னாள் தளபதி எச்சரிக்கை

மும்பை, ஜன.5-  ராணுவத்திற்கான ஆயுத கொள்முதலை அரசியலாக்கினால் நாட்டிற்கே பாதிப்பு ஏற்படும் என்று விமானப்படை முன்னாள் தளபதி எச்சரித்துள்ளார். மும்பை ஐஐடி மற்றும் தில்லி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப்படை முன்னாள் தளபதி தனோவா பேசியதாவது:  நாட்டின் பல பகுதிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு 32 முறை விமானங்கள் பயணித்தன. ஆயுத தளவாட கொள் முதலை அரசியலாக்கக் கூடாது; அவ்வாறு அரசியலாக்கினால் இந்தியாவுக்கே பாதிப்பு ஏற்படும்.  பாலகோட் தாக்குதல் சம்பவ த்துக்கு பிறகு நடுவானில் நடை பெற்ற சண்டையில் ரபேல் விமா னத்தை இந்திய விமானி அபி நந்தன் ஓட்டியிருந்தால், பாகிஸ்தான் விமானப்படைக்கு பேரழிவு ஏற்பட்டி ருக்கும். வரி செலுத்துபவர்களின் பணம் என்பதால் போர் விமானங் களின் விலை பற்றி கேள்வி எழுப்ப மக்களுக்கு உரிமை உள்ளது. பண மதிப்பிழப்புக்கு பிறகு 625 டன் எடை கொண்ட புதிய ரூபாய்நோட்டுகள் விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.