tamilnadu

img

“எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதில்தான் நம் எதிர்காலம் இருக்கிறது”

“எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதில்தான் நம் எதிர்காலம் இருக்கிறது”  

சீத்தாராம் யெச்சூரி நகர், (மதுரை), ஏப். 6- ‘நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம், என்பதில் தான் நம் எதிர்காலம் இருக்கிறது” என்றார் ஜேஎன்யு மாணவர் பேரவை முன்னாள் தலை வர் அய்சே கோஷ் . மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட் டில் பங்கேற்ற அவர், மேலும் கூறியதாவது: “ஜேஎன்யூ-வைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களின் நலனை மையப்படுத்தியே அங்குள்ள மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன. தமிழ் மாணவர்கள் மட்டுமன்றி, நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கும் சேர்த்து, அவர்தம் பன்முகத் தன்மையை பாதுகாப்பதற்கு நாங்கள் ஒன்றி ணைந்து செயல்பட்டு வருகிறோம். மாணவர் நலனுக்கு விரோதமான எந்த ஒரு விஷயத் தையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. தற்போதைய தலைமுறையினரும், எதிர்வரும் தலைமுறையினரும் எந்தப் பக்கம் நிற்கப்போகிறோம் என்ற கேள்வியைத்தான் என்னுடைய செய்தியாக நான் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போதுள்ள சூழலில் நாம்  ஒருபோதும் நடுநிலைமை வகிக்க முடியாது.  நம் எதிர்காலத்தை எப்படி வடிவமைக்கப் போகிறோம் என்துதான் மிகவும் முக்கியமானது. மாணவர்களாக நாம் சமூகத்திடம் கற்றுக் கொண்டதைச் செயல்படுத்துவதும், நம்முடைய நாட்டை மேம்படுத்த கூட்டாக உழைப்பதும் மிக முக்கியம். இதைச் செய்வதற்கு நாம் தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் நிற்பதுதான் மிகவும் அவசியம். அவர்களால்தான் சிறந்த எதிர்கா லத்தை நமக்கு உருவாக்கித் தர முடியும். அனை வருக்கும் சமமான, சமூக ரீதியாகவும், பாலின அடிப்படையிலும் உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் நின்று நாட்டை நிர்மாணிப்பதுதான் நமது எதிர்காலக் கடமை. இதுதான் என்னுடைய செய்தி.” இவ்வாறு அய்சே கோஷ் கூறினார். மேலும், “மதுரையில் பல்வேறு இடங்க ளுக்குச் சென்றுள்ளேன். கட்டடக்கலை மற்றும் தொல்லியல் ரீதியாக மிக அழகு மிகுந்த நகரம் மதுரை. ஒவ்வொரு பகுதியுமே மிக நேர்த்தியாக உள்ளது. எனது சொந்த வீட்டைப் போலவே மதுரையை நான் உணர்கிறேன்” என்றார்.

26 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை பறிபோனதற்கு மேற்குவங்க அரசே பொறுப்பேற்க வேண்டும்!

சீத்தாராம் யெச்சூரி நகர், (மதுரை), ஏப். 6- “மேற்கு வங்கத்தில் திரிணாமுல் அர சின் ஊழலால் பள்ளிக் கல்வித்துறை யில் பணிபுரியும் சுமார் 26,000 பேர் வேலையிழந்துள்ளனர். இதற்கு மேற்கு வங்க மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்றார், வாலிபர் சங்க மாநி லச் செயலாளர் மீனாட்சி முகர்ஜி. மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர், அளித்த பேட்டியின் சுருக்கம்:- “மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள ஊழலுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும். வாலிபர் சங்கமும் போராட்டங்களை நடத்தும். பொதுக் கல்வியைக் காப்பாற்ற வேண்டும். ஏழை மாணவர்களின் கல்வி யை உறுதி செய்ய வேண்டும். தகுதியி ருந்தும் வேலையிழந்துள்ள ஆசிரியர் கள் மற்றும் கல்வித்துறையில் பணியாற் றும் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டுமென வலியுறுத்தி போராட்டங்களை நடத்துவோம். சட்டப் போராட்டங்களையும் மேற்கொள்வோம். எங்களது போராட்டத்தில் மேற்குவங்க மக்களும் ஒன்றிணைய வேண்டும். மாநில அரசு மற்றும் பள்ளிப் பணி யாளர் தேர்வாணையத்தின் ஊழலால், 26 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தகுதி யான ஆசிரியர்களின் வேலையையும் பறித்து விட்டது. ஆசிரியர்கள் இல்லாத நிலையில் பள்ளிகளைப் பூட்டும் நிலை உருவாகி யுள்ளது. இதனால் பள்ளிக் கல்வி பாதிக் கப்படும். குறிப்பாக ஏழை மாணவர்க ளின் கல்வி கேள்விக்குறியாகும். மற் றொருபுறத்தில் மேற்குவங்க அரசு கடந்த கல்வியாண்டில் சுமார் 8,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டது. வியாழக்கிழமை தீர்ப்பு வெளியான நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடு பட்டுள்ளனர். இதற்கு மாநில அரசே பொ றுப்பேற்க வேண்டும். லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்கவே அரசு விரும்புகிறது. இந்த ஊழலின் பின்னணியில்  திரிணாமுல் காங்கிரஸ் அரசு உள்ளது” என்றார்.