மதுரையில் வெற்றிகரமாக நிறைவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டில், வரலாற்று சிறப்புமிக்க தொழில்நுட்ப முன்னெடுப்பு அறிமுகமானது. கட்சி மாநாட்டு வரலாற்றில் முதல் முறையாக “உடனடி மொழிபெயர்ப்பு” தொழில் நுட்ப அமைப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. கட்சித் தோழர்களால் உருவாக்கப்பட்ட தனித்துவமான தொழில்நுட்பம் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற்ற இந்த மாநாட் டில், கட்சியின் தொழில்நுட்ப குழுவினர் உருவாக் கிய இந்த அமைப்பு, மாநாட்டில் நடைபெற்ற விவா தங்கள் அனைத்தையும் உடனுக்குடன் ஐந்து மொழி களில் பிரதிநிதிகளுக்கு வழங்கியது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர் இரா.சிந்தன் மற்றும் கலீல் ஜாகீர், பாலசுப்பிரமணியம், ராஜகுரு, ராஜேந்திர பிரசாத், ஆனந்த் காஸ்ட்ரோ, நர்மதா தேவி, அபிநவ் சூர்யா, மாடசாமி, சம்சீர் அகமது, முகி லன் ஆகியோர் அடங்கிய குழு இந்த முன்னெடுப் பின் வெற்றிக்குப் பின்னணியாக இருந்தது. அதிநவீன தொழில்நுட்பத்தின் செயல்பாட்டு முறை இந்த மொழியாக்க அமைப்பு பின்வரும் முறையில் செயல்பட்டது: H பிரதிநிதிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘செயலி’யைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினர். H ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிற்கும் தனித்தனி செயலிகள் வழங்கப்பட்டன. H செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன், மொழிபெயர்ப்பாளர்களின் உரை கள் திரையில் காட்டப்பட்டன.
Hமேடையில் பேசும் உரைகள் நேரடியாக பிரதி நிதிகளின் காதுகளில் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டது. தனித்துவமான விநியோகக் கட்டமைப்பு மாநாட்டு அரங்கத்திற்குள் மட்டுமே செயல்படும் வகையில், “உள் இணைய” (Intranet - Meshnet) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள்: H மொழிபெயர்ப்புக் குரல் அரங்கத்திற்குள் மட்டுமே கேட்கும் வகையில் அமைக்கப்பட்டது. Hபிரதிநிதிகள் இந்த சேவையைப் பயன்படுத்தும் போது வெளி இணைய இணைப்பு இல்லாததால் கவனச்சிதறல் குறைந்தது. H ஒவ்வொரு மொழிக்கும் 4 தோழர்கள் மொழி யாக்கப் பணியில் ஈடுபட்டனர். பொருளாதார சேமிப்பும் அரசியல் பலன்களும் கட்சித் தோழர்களின் தொழில்நுட்ப திறமை யால், மொழிபெயர்ப்புக்கான செலவு 80% வரை குறைக்கப்பட்டது. மேலும்: H உடனடி மொழிபெயர்ப்பால், தனியாக மொழி பெயர்ப்புக்கு நேரம் ஒதுக்க வேண்டிய தேவை இல் லாததால் விவாதங்களுக்கான நேரம் அதி கரித்தது. Hஅனைத்து பிரதிநிதிகளும் தங்கள் தாய்மொழி யில் விவாதங்களைக் கேட்க முடிந்ததால், பங்கேற்பும் விவாதங்களின் தரமும் உயர்ந்தது. எதிர்கால நோக்கும் முன்னேற்றமும் இந்த முதல் முயற்சியின் வெற்றியைத் தொ டர்ந்து, எதிர்காலத்தில்: H தற்போதைய 5 மொழிகளிலிருந்து 22 மொழி களுக்கு விரிவுபடுத்தும் சாத்தியத்தை பரி சோதித்துள்ளனர். Hஇம்மாநாட்டின் அனுபவங்களிலிருந்து பெ றப்பட்ட பாடங்களுடன் அடுத்த முறை மேம் படுத்தப்பட்ட சேவை வழங்கப்படும்.
Hகட்சித் தோழர்களால் உருவாக்கப்பட்ட தால், அனைத்துக் கட்சி அரங்குகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் தொழில்நுட்பம் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தாய்மொழி வழிக் கல்வி மற்றும் சேவைகளுக்காக போராடி வந்துள்ளது. அதே கண்ணோட்டத்துடன், உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த உடனடி மொழியாக்க வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவ சமூகத்தில் நவீன தொழில்நுட் பங்கள் உழைக்கும் மக்களை இடம்பெயர்த்து வதற்கு பயன்படுத்தப்படும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியில் தொழில்நுட்பம் மனித ஆற்றலை மேம் படுத்தி, சமூக வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை இந்த முன்னெடுப்பு நிரூபித்துள்ளது. இந்த புதுமையான முன்னெடுப்பு, வர்க்க-வெகு ஜன அமைப்புகளின் ஜனநாயக வழிமுறைகளை மேம்படுத்தி, புரட்சிகரச் செயல்பாடுகளை வலுப் படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை.