tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளைக் கண்ணாகக் கருதும் கட்சி

மாற்றுத் திறனாளிகளைக்  கண்ணாகக் கருதும் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை யொட்டி நடைபெற்ற செந்தொண்டர் அணிவகுப்பு - பொதுக்கூட்டத்தில் தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் சார்பில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  இவர்களில் 500 பேர் செவி மற்றும் பேச்சுத் திறன் மாற்றுத் திறனாளிகள். மாநாட்டு பொதுக்கூட்ட மேடைக்கு அருகே இவர்களுக்கு தனியிடம் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக அமர வைக்கப்பட்டிருந்தனர். இவர்களும் தலைவர்களின் பேச்சை  புரிந்து கொள்வதற்காக சைகை மொழி பெயர்ப்பாளர் எஸ். மகாலட்சுமி நியமிக்கப் பட்டிருந்தார். அவர், தலைவர்களின் பேச்சை, சைகை மொழியில் மொழி பெயர்த்தார். சைகை மொழி ஆசிரியர் மகாலட்சுமி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை இலவச சிறப்பு மறுவாழ்வு மையத்தின் தலைமையாசிரியராக பொறுப்பு வகித்து வருகிறார்.  அவர், தனது பணி குறித்து கூறுகை யில், “கடந்த ஐந்தாண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறேன். இதற்கு முன்னர், விழுப்புரத்தில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் இதுபோன்று பேசி னேன். அப்போது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு கட்சி முன்னெடுத்த இந்த முயற்சி  பாராட்டு தலுக்குரியது. அதன் தொடர்ச்சியாக மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டிலும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரு மையாகக் கருதுகிறேன். ‘எல்லோருக்கும் எல்லாமும்’ என்ற அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்சியின் கருத்துக்கள் சென்று சேர வேண்டும் என்ற முயற்சியின் விளைவு தான் இந்த ஏற்பாடு” என்றார்.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் தோ. வில்சன் கூறுகையில், “அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த மிகச்சிறந்த முன்னெடுப்பு இது. மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட சைகை மொழி விளக்கம் அளித்தது, மாற்றுத் திறனாளிகளையும் கட்சி தனது அங்கமாகப் பார்க்கிறது என்பதற்கான அடையாளம் என்றால் அது மிகையல்ல” என்றார்.

எழுத்தின் ஒளி தீக்கதிர்

தேசாபிமானி மலையாள  நாளிதழின் பாராட்டு

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய ஆற்றலைப் புகுத்தியது அதன் அகில இந்திய மாநாடு. இந்த நிலையில்,  கட்சித் தொண்டர்களை யும் ஆதரவாளர்களையும் கட்சியை நோக்கி நெருங்கி வரச் செய்யும் முக்கிய அமைப்பாளராக தீக்கதிர் செயல் பட்டுள்ளது.  லெனின் நிறுவிய நாளிதழின் பெயரான இஸ்க்ராவின்  தமிழாக்கமே ‘தீக்கதிர் ’. மதுரையில் நடந்த மூன்றாவது மற்றும் ஒன்பதாவது கட்சி மாநாடுகளின் அமைப்பு தொடர்பான குறிப்புகளுடன் 24ஆவது மாநாட்டு செய்திகளை  ‘தீக்கதிர் ‘ வழங்கியுள்ளது. 1972 ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் பணிபுரிந்தவர்களின் அனுபவங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டன. “24ஆவது கட்சி மாநாட்டை நோக்கி” என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு பக்க இணைப்பு வெளியிடப்பட்டது. அதில் 1 முதல் 23ஆவது கட்சி மாநாடுகள் வரை இடம்பெற்றது. 1992இல் சென்னையில் நடந்த 14ஆவது மாநாட்டுக்கு முன், இ.எம்.எஸ்., கட்சிப் பத்திரிகையில் ‘சோசலிசத்திற்கான இந்தியப் பாதை’ என்ற தலைப்பில் 18 கட்டுரைகளை எழுதினார். அவை ‘இஎம்எஸ் எழுதுகிறார்’ என்கிற தலைப்பில் தீக்கதிர் மறுபிரசுரம் செய்தது. 14 முதல் 23 வரையிலான கட்சி மாநாடுகள் குறித்து ஹர்கிஷன் சிங் சுர்ஜித்,  பிரகாஷ் காரத்,  சீத்தாராம் யெச்சூரி ஆகியோரின் பகுப்பாய்வுகளையும் தீக்கதிர் வெளியிட்டுள்ளது. ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகளில் வார இதழான வண்ணக் கதிரில், தமிழகத்தில் கட்சியின் முன்னோடிகள், தலைவர்கள் மற்றும் தியாகிகள் பற்றிய கட்டுரைகளை ‘காலத்தை வென்ற கம்யூனிஸ்ட் தியாகிகள்’ என்ற பெயரில் வெளியிட்டது. 25 முக்கிய பெண் தலைவர்கள் பற்றிய “கம்யூனிஸ்ட் பெண் தலைவர்கள்” என்கிற சிறப்பு கட்டுரைகளும் எழுதப்பட்டது. மார்க்சிய நூல்கள் அறிமுகம் ஒன்பது வாரங்களில் வெளியிடப்பட்டன. இவை மக்களை இயக்கத்துடன் நெருக்க மாகக் கொண்டுவர உதவும் வகையில்  அமைந்ததாக ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் கூறினார்.  1963இல் தொடங்கப்பட்ட தீக்கதிர் நாளிதழ் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இது சென்னை, கோயம்புத்தூர்,  திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி யில் பதிப்புகளைக் கொண்டுள்ளது. ‘தேசாபிமானி’ யில் இருந்து

 தமிழில் : சி. முருகேசன்