“நகராட்சிகளுடன் இணையும் 375 ஊராட்சிகள்”
சட்டமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, “கோட்டூர் ஊராட்சியுடன் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு முன்வருமா?” என்று திருத்துறைப்பூண்டி தொகுதி, சிபிஐ உறுப்பினர் கே. மாரிமுத்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு, “இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப் படுகின்றன. இதற்கு குழு நியமிக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இங்கு மட்டுமல்ல, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தாலும் 100 நாள் வேலை விரி வாக்கம் செய்யப்படும். எனவே, எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டாம்” என்றார்.
திருத்துறைப்பூண்டி நகராட்சியாக தரம் உயரும்
திருத்துறைப்பூண்டி தற்போது இரண்டாம் நிலை நக ராட்சியாக இருந்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித் துள்ளது. நாள்தோறும் வளர்ந்து வருவதால் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என்று சிபிஐ உறுப்பி னர் மாரிமுத்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், உறுப்பினர்கள் கூறுவது போன்ற எல்லா தகுதியும் இருந்தால் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளி யிடப்படும் என்றார்.
மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன் எழுப்பிய குற்றச் சாட்டுக்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , “பழுதான மின்மாற்றியைப் பழுது செய்ய விவசாயி களிடம், நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும். மின்வாரியத்தில் உள்ள முக்கியமான காலிப்பணி யிடங்களை நிரப்ப நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மின் வாரியம் சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்”என்றார்.
அவசியம் என்றால் வனங்களில் சாலை
ஒகேனக்கல் - பென்னாகரம், தருமபுரி - திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுமா? என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் க. பொன்முடி, “அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க தேவை யான பணிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். மற்ற துறைகளுடன் இணைந்து பேசி அதற் கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
மருதமலை முருகனுக்கு பிரமாண்ட சிலை
கோவை மாவட்டம் தெற்குத் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி அல்லது மருதமலை கோவில் நிதியில் இருந்து புதிதாக பல்வகை (பாலிடெக் னிக்) கல்லூரி ஒன்று துவங்கப்படுமா? என்று அதிமுக உறுப் பினர் அம்மன் கே. அர்ஜூனன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் தொடரா செலவினம் ரூ. 14 கோடியில், தொடர் செலவாக ரூ. 2 ஆயிரம் கோடியும் தேவைப் படுகிறது. மருதமலை கோவிலில் முருகனுக்கு மிகப் பிரம் மாண்ட சிலை அமைக்க உள்ளதால் தற்போதைக்கு கோயில் நிதியிலிருந்து கல்லூரி தொடங்குவது சாத்தியமில்லை என்றார்.
20 லட்சம் லிட்டர் தண்ணீர்
திருத்துறைப்பூண்டி தொகுதியில் உள்ள முத்துப்பேட்டை பகுதிக்கு நாள் ஒன்றுக்கு தற்போது 7 லட்சம் லிட்டர் வரைக் கும் தான் கிடைக்கிறது என்று உறுப்பினர் கே.மாரிமுத்து கூறி னார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என் நேரு, கொள்ளி டத்தில் இருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க முடியும் என்றால் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது, சாத்தியம் இல்லை என்றால் புதிதாக திட்டங் களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் - ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக பிரவேஷ் குமார், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி, காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.