டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரியில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்
காலநிலை மாற்றத்தினாலும், சுற்றுச் சூழலாலும் மீன்வளத்தில் ஏற்படும் மாற்றங் கள் குறித்த கருத்தரங்கம் வியாழனன்று (மார்ச் 20) பொன்னேரியில் நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த, பொன்னேரியில் உள்ள உறுப்பு கல்லூரி யான டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் தேசிய அளவிலான இந்த கருத்தரங்கு நடைபெற்றது. “மாறிவரும் காலநிலையில் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலை நிறுத்துதல் நெகிழ்திறம், தணிப்பு மற்றும் தகவமைவு உத்திகள்” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டத்தி லிருந்து விவேக் குமார், இந்திய வனப் பணி உதவி திட்ட இயக்குநர் பி.யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தினால் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர் மத்தியில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பேசினர். கல்லூரி முதல்வர் இரா.ஜெயசகிலா, முதன்மை விஞ்ஞானி அரித்ராபேரா, முனை வர்கள் மாரிமுத்து, எஸ்.சிவராஜ், ஸ்ரீஹரி, டி.ஜெயபிரகாஷ் ஆகியோர் காலநிலை மாற்றத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மீன் கழிவு களும் சுற்றுச்சூழல் பாதிப்பும் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசினர். முன்னதாக கருத்தரங்க நினைவு மலர் வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு கால நிலை சம்பந்தமான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு முதல்வர் இரா.ஜெயசகிலா சான்றிதழ் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.சோனா நன்றி கூறினார். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ப.ஜெயநாராயணா உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.