tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்…

கோடை வெயில் துவங்கிய நிலையில் தண்ணீர் பிரச்சனையை சரி செய்ய வலியுறுத்தி எபிஎம் சர்ச் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறு சிறு மின் விசை பம்புகள் மற்றும் கைப்பம்புகள் சரி செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இ.சிவராமகிருஷ்ணன் தலைமையில் எபிஎம் சர்ச் பகுதிகளில் உள்ள  பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அந்த கோரிக்கை மனுவை அரக்கோணம் நகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது.இதில் எஸ். ஆதித்யா, எபிஎம் சர்ச் கிளை தலைவர் வி. சாணக்கிய ராஜ், கிளைச் செயலாளர் பி. மகேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரகசிய வாக்கெடுப்பு தேதியை அறிவிக்க கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ரகசிய வாக்கெடுப்பிற்கு தேர்தல் தேதியை மத்திய தொழிலாளர் நலத்துறையும், என்எல்சி நிர்வாகமும் உடனே அறிவிக்க கோரி நெய்வேலி மெயின் பஜார் அருகே என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பில் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் டி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.  பொதுச்செயலாளர் எஸ்.திருஅரசு, பொரு ளாளர் எம்.சீனிவாசன், சிபிஎம் நகர செய லாளர் ஆர்.பாலமுருகன், சிஐடியு நிர்வாகி கள் ஆரோக்கியதாஸ், எம்.சந்திரன், வி.குமார், எஸ்.முருகன், எஸ்.வேலாயுதம், என்.வீராசாமி, ஜே.சாமுவேல், எம்.சம்பத், எம்.பழனிவேல், கான்ட்ராக்ட் -  சொசைட்டி சங்க    தலைவர் பழனிச்சாமி  உள்ளிட்ட வர்கள் பங்கேற்றனர்.அலுவலக செய லாளர்  எம்.அன்பழகன் நன்றி கூறினார்.

மாநிலச் செயலாளர் கைது: புவனகிரியில் ஆர்ப்பாட்டம்

கடலூர் அருகே மலையடிகுப்பம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியக் குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் புவனகிரி ஒன்றியச் செயலாளர் காளி.கோவிந்தராசு கீரப்பாளையம் செல்லையா உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.