tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விதைகளின் முளைப்புத்திறனை பரிசோதித்து விதைக்க அறிவுறுத்தல் தருமபுரி,

மார்ச் 21- விதைகளின் முளைப்புத்திறனை பரிசோதித்து விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலர் இரா.கிரிஜா அறிவு றுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தருமபுரி விதைப் பரிசோதனை நிலையத்தில் ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதை மூலம் வயல்களில் பயிர்கள் அதிகள வில் செழித்து வளரும். முளைப்புத்திறன் குறைந்த விதைகளால் பயிர்கள் குறைந்தளவே வளரும். அத னால், மகசூல் பாதிக்கப்படும். மக்காச்சோள விதைகள் 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு விதைகள் 80 சதவீத மும், சோளம், கம்பு, வீரிய ஒட்டுப் பருத்தி, பயறுவகை  விதைகள் 75 சதவீதமும், நிலக்கடலை, சூரியகாந்தி 70 சதவீதமும், மிளகாய் விதைகள் 60 சதவீதமும் முளைப் புத்திறன் இருக்க வேண்டும். இதன்படி, முளைப்புத் திறன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட கால அளவுகளில் பயிர்களின் முளைப்புத்திறன் கணக்கி டப்பட்டு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே, விவசாயிகள் விதைகளை விதைக்கும் போது, விதைகளின் முளைப்புத்திறனை அறிந்து  விதைக்க வேண்டும். இதற்காக தங்கள் விதைக்குவிய லில் மாதிரி ஒன்றை எடுத்து அதில் பயிர், ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை விவரம் எழுதி, இணைய தள மூலம் பதிவு செய்து, கட்டணமாக ரூ.80 செலுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் செயல்படும் தருமபுரி விதைப் பரிசோதனை நிலையத்தில், விதை களின் முளைப்புத்திறனை தெரிந்து சாகுபடி செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாலிபரை கடத்திய 3 பேர் கைது

கோவையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர், மாணவியின் சகோதர ரைக் கடத்தி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்த வழக்கில் 3 பேரை போத்தனூர் காவல் துறையினர் கைது செய்தனர். போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி யில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், சூர்யா என்ற  இளைஞர் கடந்த ஒரு வருடமாக தனக்கு காதல்  தொல்லை கொடுத்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்த இளைஞர் தன்னை திரு மணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும், இல்லை யென்றால் தன்னையும், தனது சகோதரரையும் கொன்று  விடுவதாகவும் மிரட்டுவதாகவும் மாணவி புகாரில் தெரிவித்தார். இதன் பேரில் போத்தனூர் காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், மாணவியின் சகோதரர் பிரவீன் குமார் கல்லூரிக்கு செல்கையில், சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன் குமாரை காரில் கடத்திச் சென்று, தாக்கி உள்ளனர். இதில் பிரவீன் குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காவல்துறையி னர் துரிதமாக செயல்பட்டு, சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது  கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுவர்கள் போலீசில் ஒப்படைப்பு நாமக்கல்,

மார்ச் 21- பள்ளிபாளையம் பகுதியில், சந்தேகத்துக்கிடமான வகையில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்த நான்கு சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் திருட்டு, வீட்டு உபயோகப் பொருட்கள் திருட்டு என  தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில  வாரங்களுக்கு முன்பு, நகராட்சி குடிநீர் குழாய் பைப்பு களை திருடிய நபர் போலீசாரால் கைது செய்யப் பட்டார். தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டுகளை தடுக்கும் வகையிலும், குற்றத்தில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் வகையிலும், பள்ளிபாளையம் காவல் நிலையம் சாலை அருகே உள்ள கண்டிப்புதூர் என்ற  பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக் கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழ னன்று அறிவழகன் என்பவர் தனது இருசக்கர வாகனத் தில் வைத்திருந்த கார்மெண்ட்ஸ் தொழிலுக்கு பயன் படுத்தப்படும் நூல், பட்டன்கள் உள்ளிட்ட சிறிய அளவி லான பொருட்கள் திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவை பார்த்துள்ளார். அதில் 14 வயதுக் குட்பட்ட நான்கு சிறுவர்கள் முகக்கவசம் அணிந்த படி யும், கைகளில் செருப்புகளை ஏந்தியவாறு சந்தே கத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்ததும், அவ ருடைய வாகனத்திலிருந்து நூல், பட்டன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது.  மேலும், சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் சைடு லாக் போடப்பட்டுள்ளதா? என வாகனத்தை ஆட்டியவாறு ஒவ்வொரு பகுதிக்கும் சென்றதும், பதி வாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அக்ரஹாரம், ஆவத்திபாளையம் உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அந்த நான்கு சிறுவர்களை  பிடித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். அந்த சிறுவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.