ஊழியர் விரோதப்போக்கு: சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊழியர் விரோதப்போக்கில் ஈடு படும் மாவட்ட சுகாதார அலுவலக உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் மாவட்ட சுகாதார அலுவ லகத்தில் பணியாற்றும் உதவி இயக் குநர் சிவராமன் என்பவர், ஏதேச்சதி காரம் மற்றும் ஊழியர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறார். அவர் மீது உரிய விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண் டும். மாதந்தோறும் நடைபெறும் சங் கங்களில் குறைதீர்ப்பு கூட்டங்களை மாவட்ட சுகாதார அலுவலர் முன் பாக நடத்தி, கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். பொது சுகா தாரத்துறை இயக்குநரின் வழிகாட்டு தல்களை மீறி மாவட்ட நிர்வாகத்தால் சுகாதார ஆய்வாளர்களுக்கு தொடர்ச் சியாக வழங்கப்படும் மாற்றுப்பணி உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் அறிவித்த கொரோனா ஊக்கத்தொகையை விடுபட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சுகாதார ஆய்வாளர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட சுகாதார அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சி.பிரபாகரன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் வி. மணிவண்ணன் துவக்கவுரையாற்றி னார். சுகாதார ஆய்வாளர் சங்க மாநில இணைச்செயலாளர் எம்.ரமேஷ் குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுரேஷ், மருந்தாளு நர் சங்க மாவட்டச் செயலாளர் கிரிரா ஜன், கல்வித்துறை நிர்வாக அலுவ லர்கள் சங்க மாவட்டச் செயலாளர் க.முத்துக்குமரன் ஆகியோர் கண் டன உரையாற்றினர். பொது சுகாதா ரத்துறை அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் வி.செல்வம் நிறை வுரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.