100 நாள் வேலை திட்டத்தில் சம்பளப் பாக்கி: விதொச போராட்டம்
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட பணியாளர்களுக் கான சம்பளப் பாக்கியை விரைந்து வழங்க வேண்டும், என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் வெள்ளியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாத சம்பளப் பாக்கியை விரைந்து வழங்க வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள அனை வருக்கும் வேலை வழங்க வேண் டும். ஒன்றிய பட்ஜெட்டில் குறை வாக நிதி ஒதுக்கியும், புதுப்புது விதிகளை திணித்தும் திட்டத்தை முடக்க முயற்சிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் வெள்ளியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு, சங் கத்தின் தாலுகா தலைவர் ஆர்.மணி யன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊத்துக் குளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சரவணனிடம் மனு அளிக்கப்பட்டது. இதேபோன்று, உடுமலை ஒன் றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் ஒன் றியத் தலைவர் எம்.ரங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம் கோரிக் கைகளை விளக்கி பேசினார். இதில், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் ஜெகதீசன், நகரச் செயலாளர் தண்டபாணி, விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கனகராஜ் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். மடத்துக் குளம் வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு, சங்கத்தின் தாலூகா செயலாளர் மாசாணம் தலைமை யில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதணன், சிபிஎம் தாலூகா செயலாளர் ஆர்.வி.வடி வேல் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். குடிமங்கலம் ஒன்றி யம், பெதப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய துணைத்தலைவர் ஆறு முகம் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சசிகலா உட் பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று, திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் மனு அளித்த னர்.