tamilnadu

img

யுகேஜி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

யுகேஜி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

கோவை மாநகராட்சி பள்ளியில்  யுகேஜி முடித்த மாணவர்களுக்கு பட் டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழாக் கள் நடத்துவதற்காக 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு செய் துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், மாநகராட்சி  மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை  தடாகம் சாலையில் அமைந்துள்ள இடையர்பாளையம் மாநகராட்சி நடு நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நி கழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரி யர் ஆனந்தலட்சுமி தலைமை தாங்கி னார். இதில், மாமன்ற உறுப்பினர்கள், பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப் பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திர ளானோர் பங்கேற்றனர். ஆண்டு விழாவின் முக்கிய அம்ச மாக, யுகேஜி பயின்று முடித்த மாண வர்களுக்கு பட்டங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட் டன. இதைத்தொடர்ந்து, பள்ளி மாண வர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற் றது. இது பார்வையாளர்களை வெகு வாகக் கவர்ந்தது. குறிப்பாக, சில மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாற் றியது பெற்றோர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற் படுத்தியது. இது போன்ற நிகழ்வுகள் அரசுப் பள்ளி மாணவர்களின் திற மைகளை வெளிக்கொணர்வதோடு, தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையி லும் அரசுப்பள்ளிகள் சளைத்ததல்ல என்பதை நிருபித்துக்காட்டியது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், தந்தை பெரியார் திரா விடர் கழகத்தின் சார்பில், புதிய கல்விக் கொள்கைக்கு எதி ரான மக்கள் இயக்கம் வெள்ளியன்று துவங்கியது. இதில், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், பொதுப்பள்ளி களுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சிபிஎம் தாலுகா செயலாளர் அன்பரசன் மற்றும் பஞ்சலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.