tamilnadu

ஜன.22 - தமிழகத்தின் 10 தொழில் நகரங்களில் ஆர்ப்பாட்டம்

ஜன.22 - தமிழகத்தின் 10 தொழில் நகரங்களில் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன. 14 - இந்திய பொருட்கள் மீது, 500  சதவிகித வரி விதிப்பதற்கான அமெரிக்க அரசின் மசோதாவைக் கண்டித்து ஜனவரி 22 அன்று  தமிழகத்தில் 10 தொழில்  நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள்  கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளன. இதுதொடர்பாக, சிபிஐ(எம்) மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர்  மு. வீரபாண்டியன், சிபிஐ(எம்-எல்-லிபரேசன்) மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகி யோர் விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு: மேலாதிக்க வெறிபிடித்து  அலையும் அமெரிக்கா! கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அமெரிக்க அரசின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட  டொனால்டு டிரம்ப், சர்வதேச சட்ட நெறிமுறை களையும், கோட்பாடுகளையும் நிராகரித்து மேலா திக்க வெறி பிடித்து செயல்பட்டு வருகிறார். இத னால் பல நாடுகள் அமைதியிழந்து வரு கின்றன. உக்ரைன் மோதல்  தொடங்கி, ஈரான் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது வரை அமெரிக்காவின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை  இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா  உடனடியாக நிறுத்த வேண்டுமென மிரட்டுகிறது. கடுமையான பாதிப்பில் இந்தியாவின் ஏற்றுமதி! இந்தியாவும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டு வருகிறது. இருப்பினும் அமெரிக்க அரசு,  இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் மீது 50 சத விகித கூடுதல் வரி விதித்தது. இதனால், இந்தியா வின் ஏற்றுமதி கடுமையாக பாதித்து வருகிறது. அண்மையில் ரஷ்யாவில் இருந்து கச்சா  எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவிகி தம் வரி விதிக்க வழி வகுக்கும் ‘ரஷ்ய தடைகள் மசோதா’வை, டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பி னர் மூலம் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ஈரான் உள்நாட்டு விவகாரங்க ளில் தலையிட்டு வரும் அமெரிக்க நிர்வாகம், ஈரானுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகள் மீது, மேலும் 25 சதவிகிதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால்,  இந்தியா கடுமை யாக பாதிக்கும். குறிப்பாக பாசுமதி அரிசி, தேயிலை,  சர்க்கரை, பழவகைகள், பருப்பு வகைகள் ஆகிய வற்றின் ஏற்றுமதி பாதித்து,  வேளாண்மை பொரு ளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். டிரம்ப்பின் அடாவடிக்கு எதிராக  வாய் திறக்காத மோடி அரசு இவை எல்லாவற்றுக்கும் மேலாக “இந்தியா  எனது விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டும்.  என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்ந்தால் விளைவு பயங்கரமாக இருக்கும்”  என டிரம்ப் இந்தியாவை நேரடியாக மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் அத்துமீறல் குறித்தும், அடா வடித்தனம் குறித்தும் இந்தியா இதுவரை வாய்  திறந்து பேசாமல், அமைதி காத்து வருவது, நமது அயலுறவுக் கொள்கைக்கு இழைக்கப்படும் துரோக மாகும். இதனை நாட்டு மக்கள் ஒரு போதும் அனு மதிக்க மாட்டார்கள். அனைத்துப் பிரிவினரும் போராட்டத்தில் இணைவீர்! அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக் கும், மிரட்டலுக்கும் கண்டனம் தெரிவிக்கும் முறை யில், இடதுசாரிக் கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனி னிஸ்ட்) விடுதலை ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து 22.01.2026 வியாழனன்று சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர்,  ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 10 தொழில் நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையையும், ஏற்றுமதி வர்த்தகத்தையும் பாதுகாக்க நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், சிறு, குறு,  நடுத்தர தொழில் முதலீட்டாளர்கள், வணிகர்கள் என அனைத்துப் பிரிவு மக்களும் கலந்து கொண்டு ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.