tamilnadu

நூற்றாண்டு வயதைத் தொடங்கிய தோழர் வி.கே.பழனிக்கு அமைச்சர் பி.மூர்த்தி நேரில் வாழ்த்து

நூற்றாண்டு வயதைத் தொடங்கிய தோழர் வி.கே.பழனிக்கு அமைச்சர் பி.மூர்த்தி நேரில் வாழ்த்து

மதுரை, ஜன.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வி.கே.பழனி அவர்கள் நூற்றாண்டு தொடங்கியதையொட்டி  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதன்கிழமை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மதுரை புதுயுக வாலிபர் திரேக பயிற்சி சாலையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தோழர் வி.கே.பழனியின் நீண்டகால சமூக சேவை, தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு ஆகியவற்றை அமைச்சர் நினைவுகூர்ந்து பாராட்டினார்.  மேலும், அவரது வாழ்நாள் பொதுச் சேவை இளம் தலைமுறைக்கு வழிகாட்டியாக இருப்பதாகக் குறிப்பிட்டு, நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்தினார்.