காயம்குளம், ஜுலை 19- கேரள மாநிலம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காயம்குளம் வட்டாரக் குழு உறுப்பினர் அம்பாடி ஆர்.எஸ்.எஸ் போதை கும்பலால் குத்தி கொல்லப்பட்டார். அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தின ருக்கு ஆறுதல் தெரிவித்த சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிஒய்எப்ஐ ஆலப்புழா மாவட்டம் காயம்குளம் தொகுதிக் குழுவின் கீழ் உள்ள தேவிகுளங்கரா வட்டாரக் குழு உறுப்பினர் தோழர் அம்பாடி ஆர்.எஸ்.எஸ்-ன் போதைப் பொருள் கும்பலின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசியதற்காக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்றார். மாநிலம் முழுவதும் தங்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் இது போன்ற கொலைகளை ஆர்எஸ்எஸ் நடத்தி வருகிறது. அம்பாடி கொலை திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மக்களின் உணர்வு எழ வேண்டும் என்றார். அம்பாடியின் உடல் கூராய்வுக்குப் பிறகு வந்தானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தேவிகுளங்கரை ஊராட்சித் தலைவர் எஸ்.பாவநாதன் தலைமையில் பெறப்பட்டது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் எம்.ஏ.பேபி மருத்துவமனைக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்தினார். மத்தியக்குழு உறுப்பினர் சி.எஸ்.சுஜாதா, மாவட்டச் செயலர் ஆர்.நாசர், மாநிலக்குழு உறுப்பி னர் சி.பி.சந்திரபாபு, எச்.சலாம் எம்எல்ஏ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். டிஒய்எப்ஐ மாநில தலைவர் வி.வாசிப், செயலாளர் வி.கே.சனோஜ், மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.ராகுல், மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ்குமார், செயலாளர் ஜேம்ஸ் சாமுவேல், மாநிலக்குழு உறுப்பினர் அருண்குமார் எம்எல்ஏ ஆகியோர் டிஒய்எப்ஐ கொடியை உடல் மீது போர்த்தி னர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக காயங்குளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.