tamilnadu

img

வாலிபர் சங்கத்தின் தூய்மைப் பணி இயக்கம்

வாலிபர் சங்கத்தின் தூய்மைப் பணி இயக்கம்

திருவாரூர், ஜன.4 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் பேரளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக் குழு சார்பில் தூய்மைப் பணி இயக்கம் 2 ஆம் நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எம்.பாலா தலைமையில், ஒன்றியச் செயலாளர் டி.வி.இன்குலாப் முன்னிலையில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அருண்நேசன், ஆர்.யாபேஷ், ஜே.தாமோதரன், பி.ராகுல், சூர்யா மற்றும் கிளை உறுப்பினர்கள் மருத்துவமனை வளாகத்தில் மண்டிக் கிடந்த செடி, கொடிகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் ஈடுபட்ட தோழர்களை பேரளம் நிலைய மருத்துவர்கள் பாராட்டினர்.