பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கோவை, பிப். 4- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் புதனன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட் டது. கோவை மாவட்டம், ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் பவன்குமார் க.கிரியப்பனவர், புதியதாக 7100 பயனாளிக ளுக்கு ரூ.10.22 கோடி மதிப்பீட்டில் ஒய்வூதிய திட்ட உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 260 பயனாளிக ளுக்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை யும் வழங்கினார். அருகில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 40 முகாம்கள், நக ராட்சிகளில் 41 முகாம்கள், பேரூராட்சிகளில் 84 முகாம்கள் மற்றும் ஊராட்சிகளில் 175 முகாம்கள் என மொத்தம் 340 முகாம் கள் நடைபெற்றன. இம்முகாம்களில் பட்டியலிடப்பட்ட சேவைகளில் 68,674 மனுக்கள் பெறப்பட்டு, 42,682 மனுக்கள் ஏற்கப்பட்டு, 25,992 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், பட்டியலிடப்படாத சேவைகளில் 69,187 மனுக்கள் பெறப்பட்டு, 47,432 மனுக்கள் ஏற்கப்பட்டு, 21,775 மனுக் கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதனன்று ஈரோடு, ஆர்.என்.புதூர் பிளாட்டின மஹாலில் நடைபெற்ற நிகழ்வில், வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, மொத்தம் 2,025 பயனாளி களுக்கு ரூ.19,73,48,722 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, மாநக ராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமார், மாநக ராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்த குமார், துணை மேயர் திரு.வே.செல்வராஜ். வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட் டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் சமூக பாதுகாப்புத் திட்டப்பயன் கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் வழங்கினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆ.மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வ ரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
