அரசியல் சார்பற்ற அமைப்புகள் என சொல்வது விவசாயிகளை ஏமாற்றக்கூடியது
பி.டில்லிபாபு விமர்சனம் திருப்பூர், பிப்.4- மேற்கு மண்டலத்தில் அரசி யல் சார்பற்ற, கட்சி சார்பற்ற விவ சாயிகள் அமைப்பு என சொல்லிக் கொள்வது சரியானதல்ல. அது விவசாயிகளை ஏமாற்றக் கூடியது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு கூறினார். திருப்பூரில் புதனன்று நடை பெற்ற விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் அவர் பேசுகை யில்: கட்சி சார்பற்ற விவசாயிகள், அரசியல் சார்பற்ற விவசாயிகள் சங்கம் என்று சொல்வது புரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய நாட்டின் பிரதம மந்திரி பல லட்சக் கணக்கான விவசாய நிலங்களை அதானிக்கும், அம்பானிக்கும் தாரை வார்க்கிறார். அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த கார்ப்ப ரேட் நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரித்து, பால் இறக்குமதி, உணவு, பருப்பு, எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுத்தால் இது அரசியல் அல் லவா? திருப்பூர், ஈரோடு, நாமக் கல் மாவட்டத்தில் பல லட்சக்கணக் கான லிட்டர் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்படக்கூடிய பால் விற்கப்படும் என்றால், இந்த மேற்கு மண்டலத்திலே இருக்கும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக் காதா? இது அரசியல் அல்லவா? கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் என்று சொல்லி, அவர்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள், யாரிடம் கோரிக்கை வைக்கிறார் கள்? இந்திய நாடு முழுவதும் விவ சாயிகள் இருக்கும் கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என ஒன் றிய அரசிடம் கோரிக்கை வைத்தி ருக்கிறோம். போராட்டம் நடத்துகி றோம். ஆதிவாசி மக்கள் 50 ஆயி ரம் பேர் நீண்ட நெடிய நடைப யணம் சென்று வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இது அரசியல் இல்லையா? ஆனால் மேற்கு மாவட்டத்தில் இருக்கும் சில அமைப்புகள் அரசியல் சார் பற்றது என்று சொல்லிக் கொள் வது துரதிருஷ்டமானது. நாம் அரசியல் சார்பானவர்க ளாக இருக்கலாம். விவசாயிக ளுக்கு அவரவருக்கு விருப்பமான அரசியல் கட்சிகளின் சார்பு இருக்க லாம். ஆனால் விவசாயிகள் என்ற முறையில் தேசம் முழுவதும் விவ சாயிகளுக்கு தேசம் முழுவதும் கோரிக்கை வைக்கிறோம். விவசா யிகளின் பிரதான கோரிக்கைக்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயிகள் சங் கமும் பாடுபட்டு வருகிறது. விவ சாயிகளின் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பது, கடன் தள் ளுபடி செய்வது, ஈரப்பதம் பற்றிய விசயம் இதில் அரசு தலையிட வேண்டும் என்பது தமிழ்நாடு அர சிடம் வைக்கும் கோரிக்கையா? நாட்டை ஆளும் ஒன்றிய அரசிடம் வைக்கும் கோரிக்கை அல்லவா? உர மானியம் வெட்டப்பட்டிருக்கி றது, நூறு நாள் வேலை சீர்குலைக் கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் ஒன்றிய அரசு செயல் அல்லவா? இதைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? இது அரசியல் கோரிக்கை தானே. அதே சம யம் மாநில அரசிடம் வைக்க வேண் டிய கோரிக்கையும் உள்ளது. அதை யும் நாங்கள் கோரிக்கை வைக்கி றோம். அதற்காகப் போராடுகி றோம். இதுவும் அரசியல் தானே? எனவே கட்சி சார்பற்ற, அரசி யல் சார்பற்றது என்பது விவசாயி களை ஏமாற்றக்கூடியது. கோரிக் கைகளை முன்வைத்து, ஆட்சியா ளர்களிடம் கோரிக்கை வைத்துப் போராடினால்தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று பி.டில்லி பாபு கூறினார்.