திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் வசிக்கும் 192 குடும்பங்களுக்கு விரைந்து பட்டா கிடைத்திட அரசாணை வெளியிடக் கோரி, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், சென்னையில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதாவை புதனன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார்.
