tamilnadu

img

ஐந்தாண்டு தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மாணிக்காபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கிடைத்தது

ஐந்தாண்டு தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மாணிக்காபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கிடைத்தது

திருப்பூர், பிப்.4- பல்லடம் மாணிக்காபுரத்தில் க.ச.எண் 91ல் குடியிருந்து வருவோ ரின் 150க்கும் மேற்பட்ட  பட்டாக் களை வகை மாற்றம் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கமும் தொடர்ந்து 5 ஆண்டு களாக நடத்தி வந்த போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி யில் க.ச எண் 91 ல் 150க்கும் மேற் பட்டோர் பல ஆண்டுகளாக குடியி ருந்து வருகிறார்கள். இவர்களுக்கு 2001 ஆம் ஆண்டு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டா வில் மேய்ச்சல் நிலம் என்ற வகை பாட்டில் இருந்ததால் வங்கி கடன் பெறுவது, நில அளவீடு, அரசு திட் டங்கள் நிறைவேற்றுவதில் தாம தம் என சிரமங்கள் இருந்தன. இதை யடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 31  அன்று செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் பி.சீனிவாச ராவ் நினைவு நாளன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணிக் காபுரம் ஊராட்சி கிராம சபை கூட் டங்களில் தொடர்ந்து  வலியுறுத்தப் பட்டது. பல்லடம் தாலுகா ஜமா பந்தியில் மனு கொடுப்பது என 5  ஆண்டுகளாக தொடர் போராட்டங் கள் நடத்தப்பட்டு வந்தன. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியக்குழு உறுப்பினர் எஸ்.துரை சாமி தலைமையில் இந்த போராட் டங்கள் நடத்தப்பட்டு வந்தன.  இந்த தொடர் போராட்டங்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஆர்.பரம சிவம், சா.பிரவீன் குமார், கிளைச் செயலாளர் கிருஷ்ணகுமார், வாலி பர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் தின கரன், முருகேஷ், விஜய், சுதாகரன், கிளை நிர்வாகிகள்  வினோத், தியா கராஜ், சந்துரு, கோபி, மோகன், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2024ஆம் ஆண்டு பல்ல டம் தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அப்போ தைய மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் பட்டது. அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கருப்பண்ணசாமி நகர் மக்களுக்கு உடனடியாக பட்டா கொடுப்பதாக உறுதியளிக் கப்பட்டது. அத்துடன், மாணிக்கா புரத்தில் வகை மாற்றம் செய்து,  கூடிய விரைவில் பட்டா கொடுப் பதாகவும் வருவாய்த்துறை சார் பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கருப்பண் ணசாமி நகர் பகுதியை சார்ந்த 31  பேருக்கு உடனே பட்டா வழங்கப் பட்டது. தற்போது கடந்த ஜனவரி 26 குடியரசு தின கிராம சபையை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில், ஒரு வார காலத் திற்குள் பட்டா வகை மாற்றம் செய்து வழங்கப்படும் என்ற உத்தர வாதம் அளிக்கப்பட்டது.  இதனடிப்படையில் புதனன்று திருப்பூர் தனியார் திருமண மண் டபத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி யில் 119 பேருக்கு நத்தம் என வகை மாற்றம் செய்து பட்டாக்கள் வழங் கப்பட்டன.  பட்டா பெற்ற மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு இன்முகத்துடன் தங்கள் நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.