காட்சிப்பொருளாக மாறி வரும் ஆழ்குழாய் கிணறு
உடுமலை, பிப்.4- கிராமங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து தற்பொழுது பயன்படுத்தாமல் இருக் கும் ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட் டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குடிநீர் கேட்டு தினம் ஒரு பகுதியில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகி றார்கள். தீர்வு கிடைக்காமல் சில கிரா மங்களில் சாலை மறியல் போராட்டம் வரை நடத்தியும் ஊராட்சி நிர்வாகத் தால் பொது மக்கள் பயன்படுத்தும் தேவைக்கு தண்ணீர் தர முடிய வில்லை. இதற்கு முக்கிய காரண மாக இருப்பது திருமூர்த்தி அணை யில் இருந்து கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங் கும் திட்டம் நடைமுறைக்கு வந்த வுடன் அது வரை பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் ஊர் பொதுக் குழாய்களில் விடப்பட்டதை நிறுத்தப் பட்டதன் காரணமாக கிராமங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த ஆழ்குழாய் கிணறுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆனால், தற்பொழுது கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்க ளுக்கு தேவையான தண்ணீர் வழங்க முடிவது இல்லை மேலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் தண்ணீர் வழங்குவதால் தற்பொழுது கிரா மங்களில் புதிய வீட்டுமனைகள் அதிகமானதால் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது குடிநீர் தட்டுப் பாட்டிற்கு முக்கிய காரணமாக உள் ளது. பொது மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதை ஊராட்சி நிர்வாகம் கருத் தில் கொண்டு ஏற்கனவே பயன் பாட்டில் இருந்த ஆழ்குழாய் கிணறு களில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய நடவ டிக்கை எடுத்தால் மட்டுமே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். மேலும், உடுமலை மற்றும் மடத் துக்குளம் ஊராட்சிப் பகுதிகளில் பல ஆழ்குழாய் கிணறுகளில் இருக்கும் மின் மோட்டார், இரும்பு குழாய்கள் மற்றும் மின் சாதனங்களை காணா மல் போனதாகவும் இதற்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் என் கிற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே, ஊராட்சி ஆவணங்களின்படி பழைய ஆழ்குழாய்கள் அமைக்கபட்டதை ஆய்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
