tamilnadu

img

ரயில் மோதி ஆண் குட்டியானை உயிரிழப்பு

ரயில் மோதி ஆண் குட்டியானை உயிரிழப்பு

கோவை, பிப்.4- வாளையாறு அருகே கேரளம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் மோதி 4 வயது ஆண் குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடகா மாநிலம், எஸ் வந்த்பூரில் இருந்து கேரளம் மாநிலம், கண்ணூருக்கு கோவை வழியாக விரைவு ரயில் இயக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், செவ் வாயன்று இரவு எஸ்வந்த்பூ ரில் இருந்து கிளம்பிய விரைவு ரயில் கோவை வழி யாக புதனன்று அதிகாலை கேரளம் மாநிலம், பாலக்காட்டை  நோக்கி சென்றது. அப்போது கோவை - கேரளா எல்லையான,  வாளையாறு மான் பூங்கா அருகே ரயில் சென்ற போது ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் நான்கு வயது ஆண் குட்டியானை மீது ரயில் மோதியது. இதில் குட்டி  யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ரயிலை இயக்கி  வந்த லோகோ பைலட் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து வாளையாறு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ  இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த ஆண் குட்டி யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு  மேற்கொள்ள உள்ளனர். அதேபோல் கடந்த சில தினங்க ளாக அப்பகுதியில் இரண்டு யானைகள் சுற்றித்திரிந்ததாக வும், அதில் ஒரு யானை தான் தற்போது ரயிலில் மோதி உயி ரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ரயில் மோதி யானை உயிரிழந்த இடத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் தமிழக எல்லையில்  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், ரயில் யானை மோதல்  தடுக்கப்பட்டு சுமார் 6,000 முறை யானைகள் பத்திரமாக  ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக் கது. இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகை யில், வனப்பகுதியில் ரயில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தி லேயே இயக்கப்பட்டது. தண்டவாளம் வளைவான பகுதி யில் இருந்ததால் யானை கடப்பதை ஓட்டுநரால் முன்கூட் டியே கவனிக்க முடியவில்லை என தெரிவித்தனர். வன ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், வாளையார்  அருகே கேரளா எல்லை பகுதியில் ரயில் மோதி யானை உயிரி ழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. எட்டிமடை - மதுக்கரை  இடையே தமிழக வனத்துறையின் சிறப்பான முயற்சியால் 12  கோபுரங்களில் தல இரண்டு கேமராக்கள் உட்பட மொத் தம் 24 தெர்மல் சென்சிங் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வந்த நிலையில். 2022 அக்டோபர் மாதம்  முதல் ரயில் மோதி யானை உயிரிழப்பு நடைபெறவில்லை.  எனவே தமிழக வனத்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது போல வாளையார் கொல்லங்கோடு இடையே தெர்மல் சென் சிங் கேமராக்கள் அமைத்து கட்டுப்பாட்டு மையம் அமைக்க  வேண்டும். அப்போதுதான் இது போன்று ரயில் மோதி  யானைகள் உயிரிழப்பதை தடுக்க முடியும். ஒவ்வொரு வருட மும் இந்தியா முழுவதும் 10 முதல் 15 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து வருகின்றன. எனவே ரயில்வேத்துறை இந்த  விஷயத்தில் முழு கவனம் செலுத்தி அடிக்கடி ரயில் மோதி  யானைகள் உயிரிழக்கும் பகுதிகளில் தெர்மல் சென்சிங் கேம ராக்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.