மதுரை, ஏப்.15-சிறு-குறு தொழில்களை அழித்து,இருக்கிற தொழிலையும் அழித்த பாஜகவையும் அதற்குத் துணைபோகும் அதிமுக-வையும் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராசன் கூறினார்.திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உச்சப்பரம்புமேட்டில் நடைபற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-பிரதமர் மோடியும் அவர் தலைமையிலான அரசும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே சேவை செய்துவருகிறது. சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை நீதிமன்றம் ரத்துசெய்துள்ள நிலையில் இந்தத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த ராமதாசை அருகில் வைத்துக்கொண்டு எட்டுவழிச்சாலையை நிறைவேற்றுவோம் என்கிறார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி. அவரது பேச்சுகுறித்து ராமதாஸ் வாய்திறக்கவில்லை. இந்தத்திட்டம் அதிமுகவினர் கமிஷன் பெறுவதற்காகவும், சேலம் பகுதியிலுள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிக்கப்படு வதற்காகவுமே மேற்கொள்ளப்படவிருந்தது. வருடத்திற்கு ஐந்து கோடிப்பேருக்கு வேலை வழங்கப்படுமென் றது பாஜக அரசு. ஆனால், சொந்தத்தொழிலை அழித்து, இருக்கிற வேலைவாய்ப்பையும் பறித்துவிட்டது. மத்திய அரசில் மட்டும் 25 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஜிஎஸ்டி மூல6ம் மாநில வரிவருவாய்க்கான வழியை மத்தியஅரசு அடைத்துவிட்டது. பொருளாதாரத்தின் ஆணி வேரையே எடுத்துவிட்டது. அதை எதிர்த்து கேள்வியெழுப்பாமல் அவர்களுடன் அதிமுக கூட்டு வைத்துள்ளது. அதிமுக-வை விட எதிர்ப்புக் குரலை கடுமையாகக் கொடுத்த பாமக-வும் பாஜக-வுடன் ஐக்கியமாகி இது குறித்து மௌனம் காக்கிறது.
கடந்த காலங்களில் 11 முறை பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதை அப்போதைய பிரதமர் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்தனர். ஆனால் மோடி ஆட்சியில் நடைபெற்ற துல்லியத் தாக்குதலை தமது சாதனையாகக் கூறி வாக்குகளைப் பெறுவதற்காக அதை வெளியில் கூறுகிறார்.சிபிஐ ஆளுங்கட்சியின் கைப் பாவையாக மாற்றப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்றத்தை நெருக்கடிக்குள் ளாக்கி அதன் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டது என நான்கு நீதிபதிகள்பகிரங்கமாகக் கூறியுள்ளனர். ரிசர்வ்வங்கியின் சேமிப்புப் பணத்தை எடுத்து பாஜக செலவழித்துள்ளது. 85 ஆயிரம் கோடி பொதுத்துறை பங்குகளை விற்று அந்தப் பணத்தையும் எடுத்து செலவழித்துள்ளனர்.நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக் குறியாகியுள்ளது. மத்தியில் அமையவுள்ள மதச்சார்பற்ற அரசு அந்தத் தேர்வை தமிழகத்தில் புகுத்த மட்டோம் என உறுதியளித்துள்ளது. தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படும்.
எடப்பாடியை மிரட்டி கூட்டணி அமைத்துள்ள மோடி, தேனி தொகுதியில் போட்டியிடும் ஒ.பன்னீர்செல் வம் மகனை அருகில் வைத்துக் கொண்டு வாரிசு அரசியலை ஒழிப் போம் என்கிறார்மோடி தலைமையிலான ஆட்சிகொடிய ஆட்சி. அதுவும் தமிழகத்தில்அதிமுகவும் தோற்கடிக்கப்படவேண்டும். மதுரையின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க சு.வெங்கடேசனை வெற்றி பெறச் செய்யுங்கள்.இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசினார்.கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தி, வட்டச்செயலாளர்கள் ராமமூர்த்தி, சசிகுமார், செங்கிஸ்தான், மணி, செந் தில், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வசந்தி, காட்டுராஜா, பேச்சி, சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், து.ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், நாகராஜ், துரைராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.